IND vs AUS: மீண்டும் இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்துள்ள டிராவிஸ் ஹெட்!

IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் தான் முக்கிய பங்கு வகித்தார். முதல் இன்னிங்ஸில் 140 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவினார். நாளை தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு தொந்தரவு கொடுப்பாரா? ஹெட்டை அவுட்டாக இந்திய அணி சில வேலைகளை செய்ய வேண்டி உள்ளது.

தலைவலியாக இருக்கும் ஹெட்

இந்திய அணிக்கு கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறார் டிராவிஸ் ஹெட். ஏனெனில் இந்தியாவுக்கு எதிரான பல முக்கியமான போட்டிகளில் மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸ் கொடுத்து வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, 2023 ஒருநாள் உலக கோப்பை போட்டி, 2024 டி20 உலக கோப்பை போட்டி என தொடர்ந்து இந்திய அணி என்றாலே ரன்கள் அடிக்கிறார். அதே போல அடிலெய்டு டெஸ்டிலும் இந்திய அணியின் வெற்றியை பறித்தார். இந்நிலையில் கப்பா டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் 45 ரன்கள் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 1000 ரன்களை அடித்த சாதனை படைக்க உள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் எதிராகவும் ஹெட் 1000 ரன்களை அடிக்கவில்லை. இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக டிராவிஸ் ஹெட் 24 இன்னிங்ஸ்களில் 910 ரன்கள் எடுத்துள்ளார்.

TRAVIS HEAD IN THE LAST 3 INNINGS AT GABBA IN TESTS:

– 0(1)
– 0(1)
– 0(1) pic.twitter.com/RyOzB9I2g7

— Johns. (@CricCrazyJohns) December 12, 2024

டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 21 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதில் 47.75 சராசரியுடன் 955 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்களும் மற்றும் 4 அரைசதங்களும் அடங்கும். இந்திய அணிக்கு எதிரான தனது 2வது சதத்தை கடந்த போட்டியில் அடித்தார். இதற்கு முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக இவ்வளவு சிறப்பான சாதனை வைத்துள்ள ஹெட் பாகிஸ்தானுக்கு எதிராக மிக மோசமான சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 14 இன்னிங்ஸ்களில் இதுவரை 295 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி எப்படியாவது டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் இந்த போட்டியிலும் இந்தியாவின் வெற்றியை பறித்து விடுவார். ஆனால் கப்பாவில் ஹெட்டின் ரெகார்ட் மோசமாக உள்ளது. கடைசியாக விளையாடிய 3 போட்டியில் ஹெட் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறி உள்ளார். இதனை இந்திய அணி புரிந்து கொண்டு ஹெட்டின் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டோகெட், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ்வெல் ஸ்வீனி, ஸ்டார் , பியூ வெப்ஸ்டர்.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹம்மத் சிராஜ், ஜடேஜா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.