சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் சார்பில், நிவாரண நிதியாக ரூ.1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750-ஐ தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினர். தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் சாத்தனூர்அணை திறப்பு காரணமாக வட மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துஉள்ளன. குறிப்பாக, விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. […]