Airtel Disney+ Hotstar OTT Recharge Plans: ஏர்டெல் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வியப்பூட்டும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் இலவச அணுகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களை பெரிதாக கவர்ந்துள்ளது என சொல்லலாம்.
ஜியோசினிமா நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைய இருக்கும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டம் பரந்தளவில் கவனத்தை கவர்ந்துள்ளது. சில நாள்களுக்கு முன்னரே ஜியோ நிறுவனம் புத்தாண்டுக்கு என பிரத்யேக திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. 200 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஜியோ பல்வேறு பலன்களை அள்ளிவீசியதையும் பார்க்க முடிந்தது.
ஏர்டெல் புதிய திட்டம்
ஜியோவின் இந்த நகர்வுக்கு பின்னர் ஏர்டெல் நிறுவனமும் புதிய வாடிக்கையாளர்களை கவரவும், தற்போதைய வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுவந்திருப்பதாக தெரிகிறது. கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திய காரணத்தால் பல வாடிக்கையாளர்கள் வெளியேறியதாக கூறப்பட்டது. அந்த வகையில், அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வர இந்த நிறுவனங்கள் பல கட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தின் விலை ரூ.398 ஆகும். இதில் நீங்கள் வேறு எந்த நெட்வோர்க் கொண்ட பயனருடன் மொபைல் காலிங்கில் வரம்பற்ற வகையில் பேசிக்கொள்ளலாம். மேலும், தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா கொடுக்கப்படுகிறது. அதுவும் போக உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டது என்றால், வரம்பற்ற 5ஜி டேட்டா வசதியையும் நீங்கள் பெறுவீர்கள். மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாள்கள் ஆகும். இதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிவும் 28 நாள்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
இதேபோல், பல ரீசார்ஜ் ஆப்ஷன்கள் உள்ளன. 379 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 30 நாள்கள் ஆகும் மேலும், 349 ரூபாய்க்கும், 355 ரூபாய்க்கும் ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் வைத்துள்ளது. 355 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாள்கள் ஆகும். இதில் மொத்தம் 25ஜிபி டேட்டா கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம். 349 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன், 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும்.
ஜியோ 2025 திட்டம்
ஜியோவின் புத்தாண்டுக்கான பிரத்யேகமான ரீசார்ஜ் திட்டத்தின் விலை 2025 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 200 நாள்கள் ஆகும். இதில் தினமும் 2.5 ஜிபி உங்களுக்கு கிடைக்கும். இதில் வரம்பற்ற 5ஜி சேவையையும் கிடைக்கும். அதாவது 500ஜிபி-க்கு 4ஜி டேட்டா கிடைக்கும். இதனை நீங்கள் டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இதை தவிர்த்தும் பல நன்மைகள் இத்திட்டத்தில் உள்ளன.