BSNL | இனி எங்க காலம்! ஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிஎஸ்என்எல்

BSNL New Record Latest Update: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் பிளானின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இந்த நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நெட்வொர்க்கை பயன்படுத்தி வந்தவர்கள் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு படையெடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது 2024 ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பிற தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர். அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

அதன்படி ஜூலை மாதத்தில் 15 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 21 லட்சம் பேரும்,  செப்டம்பர் மாதத்தில் 11 லட்சம் பேரும்,  அக்டோபர் மாதத்தில் 7 லட்சம் பேரும் மற்ற நெட்வொர்க்கிலிருந்து பிஎஸ்என்எல் பக்கம் திரும்பி உள்ளனர். 

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு முன்னதாக, அதாவது ஜூன் மாதம் 63,000 பேர் மட்டும் பிற தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறி உள்ளனர். 

அதன்படி பார்த்தால் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களில் கட்டண உயர்வுக்கு பிறகே பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதிலும் மற்ற நெட்வொர்க்கிலிருந்து பிஎஸ்என்எல்-க்கு போர்ட் (SIM PORT) மூலம் சென்ற செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகம். 

அதேபோல் புதிதாக பிஎஸ்என்எல் சிம் வாங்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி பார்த்தால், ஜூன் மாதத்தில் 7,00900 பேர் வாங்கிய நிலையில், ஜூலை மாதத்தில் 42 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 50 லட்சம் பேரும், செப்டம்பர் மாதத்தில்  21 லட்சம் பேரும் என புதிதாக பிஎஸ்என்எல் சிம் வாங்கிய நபர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு காலத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே தடுமாறி வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது.

தற்போது பிஎஸ்எல் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதால், அதனை மேலும் மேம்படுத்த மத்திய அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.