ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ஜக்டல்பூர் மாவட்டம் மாநில விளையாட்டுத்துறை சார்பில் பேஸ்டர் ஒலிம்பிக்ஸ் என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது, ஆயுதங்களை கைவிட்டு , சரணடைந்து பொதுநீரோட்டத்தில் இணையும்படி நக்சலைட்டுகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் மறுவாழ்வுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். சரணடையும்படி விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்தால் பாதுகாப்புப்படையினரால் நக்சலைட்டுகள் கடுமையாக தாக்கப்படுவார்கள்.
2026 மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் மோடியை இலக்கை முழுமையாக நிறைவேற்ற சத்தீஷ்கார் போலீசார் உறுதிபூண்டுள்ளனர். நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு பொதுநீரோடத்தில் இணைந்தால் நீங்கள் சத்தீஷ்கார், இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிப்பீர்கள்’ என்றார்.