சென்னை மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவ்ர் ஈவிகேஎஸ் இளங்கோவ்ன் உடலுக்கு முதவ்வர் மு க ஸ்டாலின் இர்ண்டாம் நாளாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 75) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். அவர் மறைவுக்கு அரசியல் கட்சித் […]
