ஜனவரி முதல் நவம்பர் 2024 : ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள்

புதுடெல்லி,

யு பி ஐ என்று அழைக்கப்படும் ‘ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்’, ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.கூகுள் பே. பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஜனவரி முதல் நவம்பர் 2024 வரையிலான யுபிஐ மூலம் 15,547 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஜனவரி முதல் நவம்பர் மாதத்தில் 15,547 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி (ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி – யுபிஐ), தொடங்கப்பட்டதிலிருந்து ஜனவரி முதல் நவம்பர் 2024 வரை. ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

2022ம் நிதி ஆண்டில், யுபிஐ 4600 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. அதாவது அதன் மதிப்பு ரூ.84.17 டிரில்லியனுக்கும் அதிகமாகும். இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி. 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.