டெல்லி நாளை நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் கடந்த 1952-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. மேலும் கடந்த 1968-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டு பிறகு கடந்த 1970-ம் ஆண்டில் மக்களவை கலைக்கப்பட்டது. அப்போது முதல் மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தனித்தனியாக தேர்தல் […]