புத்தக நட்பு! – குறுங்கதை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.

சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் புதிது. அதுபோல, இவன் சிந்தனைகளும், எண்ணங்களும் புதிது. மேசையின் மீது பல நோட்டு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

சில புத்தகங்களின் இடையே தாள்கள் சொருகி வைக்கப்பட்டு இருந்தன. விடியற்காலை 5 மணி இருக்கும், கண் அயர்ந்தாலும் எதையோ எழிலன் எழுதிக் கொண்டு இருந்தான். எழிலா.. எழிலா.. என்று மெல்லிய குரலில் யாரோ கதவைத் தட்டுகிறார்கள். 

மெதுவாக நடந்து சென்று, கதவைத் திறக்க, நண்பன் வைத்தியநாதன் நின்று கொண்டிருந்தான். ஆறு மணிக்கு வேறு சங்கதியாய் வெளியூர் செல்ல வேண்டும் என்றும், பயணத்தின் போது நீ எழுதிய பக்கங்களை படித்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனாலேயே இவ்வளவு சீக்கிரம் உன்னை பார்க்க வந்தேன் என்று கூறினான்.

சரி வா என்று வைத்தியநாதனை மெதுவாக தன் அறைக்குள் அழைத்துச் சென்றான்.  மேசையின் மீது உள்ளவை எழிலன் எழுதியவை. இவன் படித்த புத்தகத்திற்கு வேறு ஒரு புதிய கருத்துகளை எழுதுவது இவன் வழக்கம். அதுமட்டுமின்றி எழுத்துகளில் கற்பனையையும், உண்மையையும் கையாண்டு எழுதுவது இவனுக்கு கை வந்த கலை.

சித்தரிப்புப் படம்

சரி.. என்ன சங்கதியாய் வெளியே செல்கிறாய்? என்னுடைய வேலை நிமித்தமாக செல்கிறேன் என்றான். உன்னிடமே நிறைய புத்தகங்கள் இருக்குமே? இதற்காகவா வந்தாய்? ஆம். உன் எழுத்தில் சிந்தனையும், உத்தியும் புதிதாக இருக்கிறது. ஒரு நூறு பக்கத்திற்கு மேல் எழுதி உள்ள புத்தகத்தை கொடு என்றான்.

மாலை ஐந்து மணிக்கு வந்துடுவேன். நூலகத்திற்கு நீயே சென்று விடு! என்னை எதிர்பார்க்காதே! எனக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன் என்று விடுவிடுவென்று சென்று விட்டான்.

இருவரும் ஒரு வகுப்பில் படித்தவர்கள் இல்லை. ஆனால் ஒரு புத்தகத்தால் சந்தித்தவர்கள். எழிலனுக்கு புத்தகம் வாசிப்பது மிகவும் பிடித்த ஒன்று. கல்லூரியின் விடுமுறை நாட்களில் அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று விடுவான்.

அதுவும் புரட்சியாளர்கள் புத்தகத்தை தேடி வாசிப்பது இவன் வழக்கம். அப்படி ஒருநாள் வைத்தியநாதன் அந்த நூலகத்திற்கு முதன்முறையாக வந்திருந்தான். நீண்ட நேர வாசிப்பில் மூழ்கி இருந்த எழிலனைப் பார்த்து, இந்த புத்தகத்தை எடுத்து நான் வாசிக்கலாமா? என்று அவன் கையருகில் இருந்த புத்தகத்தை எடுத்தான். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தருகிறேனே? என்றான். 

சித்தரிப்புப் படம்

அருகில் இருந்த நோட்டில் ஏதோ பத்தி எழுதியிருந்தன. எழிலன் அந்த நோட்டிலே எழுத ஆரம்பித்தான். படித்ததெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுக்குறியா? என்று நகைச்சுவையாக கேட்டான். இல்லை! இல்லை! இந்த கருத்துகளை உள்வாங்கி  கொண்டு வேறு ஒரு புதிய கருத்துகளை கதையோடு சேர்த்து புதிதாக எழுதுவேன் என்றான்.

சிறப்பு.. என்று வைத்தியநாதன் எழிலன் கையைக் குலுக்கி சிறந்த எழுத்தாளராகவும், உயர்ந்த பண்புள்ள மனிதனாகவும் திகழ்வாய் என்று உற்சாகமூட்டினான்.

 இவற்றையெல்லாம் அச்சிட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம் என்று ஒரு பேச்சுவாக்கில் எழிலன் கூறினான்.

காலை 10.00 மணிக்கு எழிலன் நூலகத்திற்கு சென்று இருந்தான். மிடுக்கான நடையுடன் நூலகர் முருகையன், நூலகத்திற்குள் நுழைந்தார். தன் இடத்தில் அமர்ந்த உடனே, தன் மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு எழிலனை உற்றுப் பார்த்தார். அடடே! வாப்பா எப்படி இருக்கிறாய்? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? நல்ல இருக்கேன் ஐயா. 

உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது? குணமாகி விட்டதா? இப்போ பரவாயில்லை தம்பி.. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இரண்டு வாரம் ஓய்வில் இருந்தார் முருகையன். இந்த நூலகத்திற்கு வந்து அமர்ந்தாலே, நோய் எல்லாம் பறந்து விடும். இந்த நூலகத்திற்கு பக்க பலமாக இருந்து, சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்றால், எழிலன் பங்கும் குறிப்பிட தகுந்ததல்லவா? என்றார் முருகையன். இது என் கடமை என்றான்.

நூலகத்திற்கு உள்ளே ஓரமாய் ஓர் இடத்தில், காகிதப்பூ அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள். என்ன ஐயா? உங்களுக்கு பிறந்தநாளா? அலங்காரம் எல்லாம் பலமாக இருக்கிறதே! என்றான். எனக்கு உடம்பு சரியாகி விட்டதல்லவா? அதைக் கொண்டாட தான் என்று கேளிக்கையாக சிரித்தார்.

அப்படியா? சிறப்பு சரி நான் கிளம்புகிறேன் என்றான். நான்கு மணிக்கு வந்து விடு! ஒரு நிகழ்வு இருக்கிறது. அவசியம் நீ வர வேண்டும் என்றார் முருகையன். ஓ! அது என்ன நிகழ்வு? அதான் சொன்னேனே எனக்கு பாராட்டு விழா என்று.. கண்டிப்பாக வருகிறேன் ஐயா.. என்று உறுதியாக கூறினான். 

சித்தரிப்புப் படம்

எழிலன், நண்பன் வைத்தியநாதனை எதிர்பார்த்து காத்திருந்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்கள் இருவரும் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை அடுக்கி வைப்பது, சுத்தம் செய்வது போன்ற பணிகளை எல்லாம் செய்வார்கள். அதற்காக தான் அவனை எதிர் பார்த்து காத்திருந்தான். சரி அவன் வரப்பாடு காணோம். நானே சென்று வருகிறேன் என்று கிளம்பிவிட்டான். 

நூலகத்திற்கு அருகில் நெருங்கியவுடன் அங்கிருக்கும் பதாகையைக் கண்டவுடன் மலைத்து போய் நின்று விட்டான். அப்படி என்னதான் இருந்தது.. எழுத்தாளர் எழிலன் அவர்களின் முதல் நூல் வெளியீட்டு விழா. முதல் நூலின் பெயர் உயரே பற! அனைவரும்  வருக! என்று இருந்தது. 

உள்ளே சென்று பார்த்த போது, வைத்தியநாதன் புத்தகத்தை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தான்.

ஓ! இதற்கு தான் வெளியூர் சென்றாயா? என்று மனதில் நினைத்துக் கொண்டு கட்டித் தழுவினான்.

அருகில் நின்றிருந்த நூலகர் முருகையனுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. எழிலனின் முதல் நூல் நிறைவாக சிறந்த எழுத்தாளர் மத்தியில் வெளியிடப்பட்டது. நூலில் உள்ள கருத்துகள் மிகவும் அருமை என்று நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பாராட்டினர். 

அதைப் பார்த்த வைத்தியநாதன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். உன்னை போன்ற நண்பன் என் வளர்ச்சியில் துணையாக இருக்கும்போது,  நான் எப்போதுமே பாக்கியசாலி.. என்றான் எழிலன். நானும் பாக்கியசாலி தான்.. உன்னை போன்ற சிறந்த எழுத்தாளரின் நண்பனாக இருப்பதற்கு என்று புன்னகைத்து கொண்டே வைத்தியநாதன் கூறினான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.