சென்னை வானகரத்தில் இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க அரசைக் கண்டித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்காக தடபுடலாக உணவு தயார் செய்யப்பட்டிருக்கிறது. அந்த உணவு மெனுவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
6000 நபருக்கு அசைவ உணவுகளும் 750 நபர்களுக்கு சைவ உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அசைவ உணவுகளின் மெனு:
மட்டன் பிரியாணி
சிக்கன் 65
வஞ்சரம் மீன் வறுவல்
முட்டை மசாலா
வெள்ளை சாதம்
ரசம் மற்றும் தயிர்
சைவ உணவுகளின் மெனு:
பருப்பு பாயாசம்
தம்ரூட் அல்வா
பருப்பு வடை
சாம்பார்
வத்தக் குழம்பு
தக்காளி ரசம்
முட்டைகோஸ் பொரியல்
புடலங்காய் கூட்டு
வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
வெள்ளை சாதம்
உருளைக்கிழங்கு பொறியல்
தயிர் மற்றும் அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய்
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…