மமுத்சொ,
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாக கொண்டுள்ள மயோட்டே தீவு, மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது.
இந்நிலையில், மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அதேவேளை, இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகளை பிரான்ஸ் அரசு துரிதப்படுத்தியுள்ளது. மீட்புப்பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.