சென்னை: ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் ‘இந்து தமிழ் திசை – வானமே எல்லை’ எனும் விமானத் துறை குறித்த அறிவியல் விநாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் VIL AVIATION ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
பள்ளி மாணவர்களிடையே விமானத் துறை குறித்த ஆர்வத்தையும், அறிவியல், தொழில்நுட்ப விழிப்புணர்வையும் தூண்டும் வகையில் நடைபெற உள்ள இந்த அறிவியல் விநாடி வினா போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம்.
இந்த விநாடி-வினா நிகழ்வுக்கான முதல் கட்டப் போட்டி ஆன்லைன் வழியாகவும், இரண்டாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்வுகள் நேரிலும் நடைபெறும். இறுதிப் போட்டிக்குத் தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் ஹெலிகாப்டரை அருகில் சென்று பார்ப்பதற்கும், அதில் பறப்பதற்குமான வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த விநாடிவினா நிகழ்வின் க்விஸ் பார்ட்னராக X QUIZ IT இணைந்துள்ளது.
இந்த விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://www.htamil.org/VE என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்து. வரும் 2025 ஜனவரி 7-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.