“ஜாபர் சாதிக் போதைப்பொருள் பணத்தை தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் முதலீடு செய்திருக்கிறார்" – அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ஜாபர் சாதிக் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், தி.மு.க நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்ணாமலை – ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 – 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும். குறிப்பிட்ட காலகட்டத்தில், தி.மு.க நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.