“தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் ஓர் உண்மையான மேதை!” – பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஓர் உண்மையான மேதை” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார். அவர் தபேலா இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமது இணையற்ற இசையால் மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்தார்.

இதன் மூலம், அவர் இந்திய பாரம்பரிய மரபுகளை உலகளாவிய இசையுடன் இணைத்தார். இதனால் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக அவர் திகழ்ந்தார். அவரது தனித்துவமிக்க நிகழ்ச்சிகள், ஆத்மார்த்தமான பாடல்கள் தலைமுறை இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்களை ஊக்குவிக்க பங்களிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உலக இசை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். | > தபேலா மேதை ஜாகிர் உசேன் வாழ்க்கை வரலாறு – வீடியோ வடிவில் இங்கே…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.