இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, மலிவு விலையில் பல அம்சங்களுடன் கூடிய திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது. ஏனெனில் இதில், தினசரி டேட்டா உடன் OTT சந்தா பலன்களும் கிடைக்கின்றன. முகேஷ் அம்பானியின் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், போஸ்ட்பெய்ட் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தினாலும், பல மலிவான திட்டங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
ஜியோவின் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மலிவான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருவதில் பெயர் பெற்றது. இதில் OTT செயலிகளின் இலவச பயன்பாடும் அடங்கும். இந்தத் திட்டங்களின் மூலம், பயனர்கள் நெட்வொர்க்கை எளிதாக அணுகுவதுடன், மலிவான விலையில் நிறைய பொழுதுபோக்கு அம்சங்களையும் பெறுகிறார்கள். அந்த வகையில் ஜியோவின் ரூ.1299 திட்டம், ஜியோவின் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த ப்ரீபெய்ட் திட்டமாக உள்ளது.
ஜியோ வழங்கும் ரூ.1,299 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.1299 கட்டணத்திலான ரீசார்ஜ் திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு மேற்கொள்ளும் வசதி உள்ளது. ஒரே ரீசார்ஜ் மூலம் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்புவோருக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இதன் மூலம், சுமார் மூன்று மாதங்களுக்கு, மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கவலை இல்லாமல் இருக்கலாம்.
தினம் 2ஜிபி டேட்டா
அதிக டேட்டாவைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் நல்ல தேர்வாக இருக்கும். தினம் 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. அதாவது 84 நாட்களில் மொத்தம் 168ஜிபி டேட்டா. ஜியோவின் 5ஜி நெட்வொர்க் கவரேஜ் உள்ள இடத்தில் இருக்கும்பயனர்கள், வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் அவர்கள் எளிதாக இணையத்தில் உலாவுதல் மற்றும் வீடியோக்களை பார்க்கும் அனுபவம் கிடைக்கும்.
இலவச Netflix சந்தா
ரூ.1299 திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது 84 நாட்களுக்கு இலவச நெட்ஃபிக்ஸ் மொபைல் சந்தாவை வழங்குகிறது. அதாவது ஒரு பைசா கூட செலவு செய்யாமல் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை உங்கள் போனில் பார்க்கலாம். இது தவிர, இந்த திட்டம் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் நிலையன்ஸ் ஜியோ, இது உங்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு தொகுப்பை வழங்குகிறது.