ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து… தப்பிக்க ஒரே ஆப்சன்..!

Rohit Sharma News Tamil | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி படுமோசமாக விளையாடிக் கொண்டிருப்பதால், கேப்டன் ரோகித் சர்மா இடத்துக்கே இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. பும்ரா கேப்டன்சியில் முதல் டெஸ்ட் போட்டியில்  வெற்றி பெற்ற இந்திய அணி, ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு ஏற்ற அடிலெய்டு மைதானத்தில் படுதோல்வியை சந்தித்தது. இப்போது பிரிஸ்பேன் காபா மைதானத்திலும் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மழை குறுக்கிட்டால் மட்டுமே இந்திய அணியை இந்த டெஸ்ட் போட்டியின் தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும். அல்லது கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய இன்னிங்ஸ் ஒன்றை பேட்டிங்கில் ஆட வேண்டும். இந்த இரண்டும் நடக்கவில்லை என்றால் அவர் இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 

ரோகித் சர்மா இடத்துக்கு ஆபத்து ஏன்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் கடந்த 12 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். மற்றபடி அவருடைய பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியிலும் மிகவும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன்சி பொறுப்பிலும் அவருடைய செயல்பாடுகள் இப்போது திருப்திகரமாக இல்லை. ஸ்டீவ் ஸ்மித் பார்ம் அவுட்டில் இருக்கும் நேரத்தில் சரியான உத்தியை கையாண்டு விக்கெட் எடுக்காமல் பீல்டிங் செட்டிங்கில் சொதப்பி, அவர் சதமடித்துவிட்டார். இதுவே ரோகித் சர்மாவின் கேப்டன்சி தவறுகளை பட்டவர்த்தமான காட்டியுள்ளது. பும்ரா கேப்டன்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி ரோகித் சர்மா கேப்டன்சியில் தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினால் பிளேயிங் லெவனில் அவருடைய இடமே கேள்விக்குள்ளாகும். 

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால், எதிர்பார்த்தபடி இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்காததால் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக பேட்டிங் ஆடி ரன்களை குவித்திருக்கிறது. பும்ரா மட்டுமே சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை இப்போதைக்கு படுமோசமாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது. களத்தில் இப்போது ரோகித் சர்மா இருக்கிறார். மழை முழுமையாக குறுக்கிட வேண்டும் அல்லது கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் ஆட வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் கூட இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியாது.

கேப்டன் ரோகித் சர்மா நீக்கம்

இதனால் ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய அணி தோல்வியை தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை நேரடியாக இழக்கும். மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக இருந்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு என்ற சூழல் உருவாகும். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு அதிக வாய்ப்பு உருவாகும். இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.