விஎச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திடாதது ஏன்? – அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்​பிரதேசம், அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்​சி​யில் பங்கேற்றுள்ளார்.

இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்​வில் நீதிபதி எந்த முறை​யில் கலந்து கொண்​டாரா என்ற வினா எழுகிறது. சட்ட​வி​திகளை மீறி இந்த நிகழ்​வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்​லிம் சமூகத்​துக்கு எதிராக விஷம் கக்கும் வெறுப்பு பேச்​சும் பேசியுள்​ளார்.

நீதித் துறை​யின் மாண்​புக்கு களங்கம் ஏற்படுத்தி, அரசி​யலமைப்பு சட்டத்​தின் அடிப்​படையான மதச்​சார்​பற்ற பண்பை தகர்த்து, அநாகரி​கமாக செயல்​பட்ட, அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு கண்டனம் தெரிவிக்​க​வும், அவரை நீதிபதி பொறுப்​பில் இருந்து நீக்​க​வும், நாடாளு​மன்ற விதி​முறைகளை பின்​பற்றி எதிர்க்​கட்சி மாநிலங்​களவை உறுப்​பினர்கள் ‘இம்​பீச்​மெண்ட்’ அறிவிப்பு கொடுத்​துள்ளனர். இந்த அறிவிப்​பில் அஇஅதிமுக கையெழுத்து போடவில்லை என்பது அதன் சந்தர்ப்​பவாத செயலை வெளிப்​படுத்து​கிறது.

பாஜகவோடு கூட்டணி இல்லை எனில், நீதிப​தி​யின் வகுப்புவாத வெறுப்​பேற்றும், மதவெறி வன்ம பேச்சை கண்டித்து, மாநிலங்களவை உறுப்​பினர்கள் 55 பேர் கையெழுத்​திட்டு மாநிலங்​களவை செயலாளரிடம் கொடுத்​துள்ள அறிவிப்பு கடிதத்​தில் அதிமுக உறுப்​பினர்கள் கையெழுத்​துப் போடாமல் நழுவிக் கொண்டது ஏன்? இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அஇஅதிமுக விளக்க வேண்டும். இவ்​வாறு ​தெரி​வித்​துள்ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.