தமிழகத்தைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தலைமை செயலாளரின் தரநிலைக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
