ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 3வது டெஸ்ட் கப்பாவில் நடைபெற்று வரும் நிலையில் 3 வீரர்கள் இந்தியா திரும்ப உள்ளனர். யாஷ் தயாள், முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் கூடுதல் வீரர்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள நிலையில், அவர்களை இந்தியா அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி 2024-25 தங்களது மாநில அணிகளுக்காக இந்த வீரர்கள் விளையாட உள்ளனர். 2025 விஜய் ஹசாரே டிராபி மொத்தம் 8 மாநிலங்களில் 18 மைதானங்களில் நடைபெற உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் ஏற்கனவே இந்தியா திரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. கலீல் அகமதுவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருந்த இவர் இதுவரை என போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாட உள்ளார். மேலும் முகேஷ் குமார் பெங்கால் அணிக்காகவும், நவ்தீப் சைனி டெல்லி அணிக்காகவும் விளையாட உள்ளனர். பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசி இருந்தார். முதல் பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட்டு உட்பட மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Yash Dayal, Mukesh Kumar, Navdeep Saini have been released from the BGT squad to play in the Vijay Hazare Trophy.#indvsausTestseries #INDvAUS #BGT2024 #BGT2025 #BGT #WTC25 #WTC2025 #Gabba #GabbaTest pic.twitter.com/E6dRJzekun
— Priyanshu Karan (@karan_rajput872) December 15, 2024
மறுபுறம், நவ்தீப் சைனி இந்தியா ஏ அணிக்காக விளையாடினாலும் விக்கெட்களை எடுக்கவில்லை. அதே போல முதல் டெஸ்ட் போட்டியில் ஷுப்மான் கில்லுக்கு பதிலாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய படிக்கல், முதல் இன்னிங்சில் 0 ரன்களும், 2வது இன்னிங்சில் 25 ரன்களும் அடித்தார். விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடகாவிற்காக விளையாட உள்ளார் படிக்கல். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 436 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
பார்டர் -கவாஸ்கர் தொடரில் 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷுப்மன் கில், சர்ஃபராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல், ரிஷாப் பந்த். ஜூரல், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா.