ஆகாஷ் தீப், பும்ரா செய்த சம்பவம்… ஆடிப்போன ஆஸ்திரேலியா – இந்திய அணி ஹேப்பி..!

India vs Australia Test Day 4 highlights | பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். இவர்களின் அற்புதமான பேட்டிங் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்ய இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. நான்கு நாட்கள் நிறைவடைந்த நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை நடக்க இருக்கிறது. ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருப்பதால் இந்திய அணி எப்படியும் தோல்வியை தவிர்த்து டிரா செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறது. 

பிரிஸ்பேன் காபா டெஸ்ட்

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் வீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். நீண்ட நாட்களாக பார்ம் அவுட்டில் தத்தளித்து வந்த ஸ்மித் இப்போட்டியில் பார்முக்கு திரும்பினார். இந்திய அணி தரப்பில் அற்புதமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். நிதீஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி படுமோசமாக பேட்டிங்கை தொடங்கியது.

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் அவுட்டாகி வெளியேறினர். ஜெய்ஷ்வால் 4, கில் 1, விராட்கோலி 3, ரிஷப் பந்த் 9, ரோகித் சர்மா 10 என நடையை கட்டினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால் டாப் ஆர்டரில் கேஎல் ராகுல் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக ரவீந்திர ஜடேஜா பேட்டிங் சிறப்பாக செய்தார். ராகுல் 84 ரன்களுக்கும், ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி பாலோ ஆன் ரன்களைக் கூட கடக்காமல் தான் இருந்தது. 

மேலும் படிக்க | IND vs AUS: 3வது டெஸ்டில் இந்தியா தோற்றால்? இந்த சிக்கல்களை சந்திக்க நேரிடும்!

ஆகாஷ் தீப் – பும்ரா சிறப்பான பேட்டிங்

அதாவது 231 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி விக்கெட் சீக்கிரம் விழுந்திருந்தால் இந்திய அணி பாலோ ஆன்ஆகி, இந்த மேட்ச் ஆஸ்திரேலியா பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், ஆகாஷ் தீப் – பும்ரா இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணியை பாலோ ஆன் நிலையை கடக்க செய்தனர். இருவரும் 54 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். 5வது நாளிலும் பும்ரா (10) – ஆகாஷ் தீப் (27) பேட்டிங் செய்ய உள்ளனர். இந்திய அணி பாலோ ஆன் ஸ்கோரை கடந்ததும் இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி – கவுதம் கம்பீர் ஆகியோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் பேட்ஸ்மேன்கள் இருவரையும் பாராட்டினர். இப்போதைய சூழலில் காபா டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி சோகம்

காபா டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறலாம் என்ற அதீத நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணி இருந்தது. பும்ரா – ஆகாஷ் தீப் பேட்டிங் காரணமாக அவரின் அந்த நம்பிக்கை இப்போது தகர்ந்து போய் இருகிறது. இப்போதும் இந்திய அணி 193 ரன்கள் பின் தங்கியே இருக்கிறது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி நாளை இந்திய அணியின் எஞ்சிய ஒரு விக்கெட்டை சீக்கிரம் எடுத்து, 2வது இன்னிங்ஸ் பேட்டிங் அதிரடியாக விளையாடி, உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியை பேட்டிங் ஆட வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியான சூழல் ஏற்பட்டால் இந்திய அணி அதிகம் ஆசைப்படாமல் டிராவை நோக்கியே விளையாடும்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2025க்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.