கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால் கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என கூறி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் விஷசாராய மரணங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 2 வாரங்களுக்குள் […]
