கோவை: தமிழக பாடத்திட்டத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 2027-ம் ஆண்டுக்குள் 18,000 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை முழுமையாக கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் […]