நாட்டின் நலனையும் மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றும் முன்னுதாரணமான பாராளுமன்றம் இது – புதிய சபாநாயகர்

நாட்டின் நலன் மற்றும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முன்னுதாரணமிக்க பாராளுமன்றமாக இந்தப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறு புதிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இன்று (17) தமது பாராளுமன்ற சபாநாயகராக பணிகளை ஆரம்பிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் நலன்களுக்காக அரசியலமைப்பின் பொறுப்புக்களை நிறைவேற்றும் போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று உரையாற்றிய சபாநாயகர், கட்சி எதிர்க்கட்சி பேதங்கள் இனறி சகல உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதுடன்,
அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் புதிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.