முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு நாளை

ஊடக அமைச்சின் தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு 2024, நாளை (19) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு பற்றிய சொற்பொழிவு, இதழியலின் எதிர்காலப் போக்கில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் என்ன ? இலங்கை ஊடக கலாச்சாரத்தின் திசையில் அதன் சமகால போக்குகள் என்ன செய்கின்றன? என்பது  தொடர்பாக கல்வி ரீதியாகவும் பகுப்பாய்வு ரீதியாகவும் கவனம் செலுத்தி, அறிஞர்கள் மற்றும் ஊடக வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை ஊடக ஆய்வுக் கட்டுரைகள் மூலம் முன்வைப்பார்கள்.

Zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறும் இந்த சர்வதேச ஆய்வு மாநாட்டின் முக்கிய உரையை தென் கொரியாவின் சைபர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எரிக் பார்க் வழங்குவார்.

04 முக்கிய அமர்வுகளின் கீழ், சார்க் பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் Zoom தொழில்நுட்பத்தின் மூலம் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், வெகுஜன ஊடக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சார்க் கலாசார நிலையம், கொழும்பு, களனி, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம், ஸ்ரீபாலி வளாகம் உள்ளிட்ட, உள்நாட்டு பல்கலைக்கழகங்களின் ஊடக ஆய்வுத் துறைகளுடன் இணைந்து இவ்வாய்வு மாநாடு நடாத்தப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.