உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 5 கோடி பரிசுத்தொகைக்கான காசோலையை குகேஷுக்கு வழங்கினார். சென்னை என்றால் செஸ் என்கிற அளவுக்கு உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பிய தம்பி குகேஷின் வெற்றிப்பயணம் தொடரட்டும் என்று அவர் வாழ்த்தினார். மேலும், தமிழ்நாட்டிலிருந்து இன்னும் பல நூறு […]