கல்வியின் புதிய மாற்றங்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் கற்பனைத்திறன் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காக, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இன்று (17) பாராளுமன்றத்தில், முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் பராமரிப்பாளர்களின் கல்வித்தகைமைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் காணப்படும் தரம், விசேடமாக பராமரிப்பாளர்களின் கல்வித்தகைமை மற்றும் டிப்ளோமா வழங்குதல் தொடர்பாக தெளிவான இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;
முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களின் தரத்திற்கு இணங்க மாத்திர மல்லாது விடினும்
மாற்றம் ஏற்படுத்தப்படும். முன்பள்ளி, பகல் நேர பாதுகாப்பு மத்திய நிலையங்கள் போன்றவையும் பல்வேறு பெயர்களில் இவ்வாறு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
கல்வியில் புதிய மாற்றத்துடன் பிள்ளைகளை மிகவும் சிறந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும். கருணை, மென்மையான திறன்கள் மற்றும் கற்பனைத்திறன் கொண்ட குழந்தைகளை உருவாக்கும் புதிய திட்டம் வரை முன்பள்ளி பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமாவை உள்வாங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெளிவுபடுத்தினார்.