ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து சுமார் 14.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், கென்யாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த […]
