இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘விடுதலை- 2’ வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் சினிமா விகடனுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் சூரி வெற்றிமாறன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். ” கதை சொல்லும்போது சில நேரத்தில் ஷார்ட் ஆக சொல்லி முடித்து விடுவார். ஆனால் அதை எடுக்கும்போது சூட்டிங்கில் ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் செய்து காண்பிப்பார்.
அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். அதுமட்டுமின்றி அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால் எப்போதும் அவரின் படங்களில் வரும் காட்சியை அவரே கலாய்த்துக் கொள்வார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ” இந்த படத்தில் எனக்கு பயங்கரமான காட்சிகள் இருக்கிறது. அதில் ஒரு காட்சி என்னை மிகவும் எமோஷனலாக்கி விட்டது. வாத்தியாரிடம்(விஜய் சேதுபதி) ஒன்று பேசுவேன்.
அவர் திரும்பி என்ன குமரேசன் என்று கூப்பிட்டு அவர் ஒரு டயலாக் சொல்லுவார். இங்கு அதை நான் சொல்ல முடியாது. படத்தைப் பாருங்கள் உங்களுக்கு புரியும். அந்த வார்த்தைகள் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கும்” என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…