கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கெரவலப்பிட்டி பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இலங்கை இராணுவம் (SLA) மற்றும் இலங்கை பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் நிறுவனத்துடன் (CPSTL) இணைந்து தீயணைப்பு ஒத்திகை பயிற்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அவசரகால சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுக்ககும் போது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவததை நோக்கமாகக் கொண்டு இப்பயிட்சி நடத்தப்பட்டதாக இராணுவ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனர்த்த முகாமைத்துவ நிலையம்- சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுக அதிகாரசபை, இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, கம்பஹா மற்றும் கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் மற்றும் CPSTL தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு மீட்புக் குழுக்களின் பங்கேற்புடன் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.