அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள லுனென்பர்க் கவுண்டியில் டிசம்பர் 9 அன்று விலங்குகளை வேட்டையாட ஒரு குழு காட்டுக்குள் சென்றது. அப்போது கரடி ஒன்றை கவனித்த அவர்கள் அதனை சுட முயற்சி செய்தனர். அந்த கரடி மரத்தின் மீது ஏறி ஓடிய நிலையில் அதை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த கரடி மரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில் அங்கு நின்றிருந்த வேட்டைக்குச் சென்ற குழுவில் இடம்பெற்ற மற்றொரு நபர் மீது விழுந்ததில் அவர் நசுங்கி அடிபட்டார். […]