கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாணக் கல்வித் துறையில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.