மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி. இந்த படகு கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா குகைகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதில் 80 பேர் இருந்த நிலையில் இந்த படகு நீரில் மூழ்கியதை அடுத்து கடலோர காவல்படையினருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்படையினர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 77 பேரை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 2 பேர் காணாமல் […]