பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சகத்தில் கடந்த 16ஆம் திகதி ரத்துகலை பழங்குடித் தலைவர் அமைச்சர் சமந்த வித்யாரத்னவை சந்தித்தார்.
இதன்போது பிபிலை மற்றும் அம்பாறை பிரதேசங்களுக்கு இடையே அமைந்துள்ள ரத்துகலை பழங்குடி கிராமத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ரத்துகலை பழங்குடி தலைவர் அமைச்சரிடம் தெளிவு படுத்தினார்.
இதில், நீண்ட காலமாக தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வுகளை எதிர்பார்ப்பதாக ரத்துகலை பழங்குடித் தலைவர் வலியுறுத்தினார். குறிப்பாக, ரத்துகலை கிராம மக்கள் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது என்று பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.