Kasima: எழுந்த விமர்சனங்கள்; காசிமாவிற்கு பரிசுத்தொகையை அறிவித்த தமிழக அரசு

காசிமாவிற்கு தமிழக அரசு பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறது.

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்த மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரங்கனை காசிமாவிற்கு எந்த ஒரு பரிசுத்தொகையும் அறிவிக்கவில்லை. இது பலராலும் விமர்சிக்கபட்டது.

அதாவது கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமா 3 தங்கப் பதங்களை வென்று சாதித்திருந்தார். இந்தச் சாதனையை அவர் 17 வயதில் நிகழ்த்திக் காட்டி இருந்தார். ஆனால், குகேஷுக்கு கிடைத்த அங்கீகாரமோ அல்லது ஊக்கத் தொகையோ இவருக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து காசிமாவின் அப்பா விகடனிற்கு பேட்டி அளித்து தன் மன வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். அது நேற்று விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். ``3 தங்கம் வென்ற எம் மகளுக்கு எதுவுமே அறிவிக்காதது வருத்தம்தான்”- கேரம் சாம்பியன் காசிமாவின் அப்பா

இந்நிலையில் தமிழக அரசு தற்போது காசிமாவிற்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறது.

அதே கேரம் இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு 50 லட்ச ரூபாயை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.