டெல்லி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த அரசியல் சாசனம் மீதான சிறப்பு விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என கூறுவது இப்போது ‘பேஷன்’ ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என்றார். எதிர்க்கட்சிகளிடையே அமித்ஷாவின் இந்த கருத்து கடும் […]