`அவரின் பல வருட கனவு’ – இயக்குநர் அவதாரம் எடுக்கும் கலை இயக்குநர் முத்துராஜ்

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாகவும், ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்குநர்களாகவும், தனுஷ் போன்ற ஹீரோக்கள் இயக்குநர்களாகவும் மாறி வரும் சூழலில், இப்போது கலை இயக்குநர் ஒருவர், டைரக்டராக அவதாரம் எடுக்கிறார்.

இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’, ‘இந்தியன் 2’, அட்லியின் ‘தெறி’, ‘பிகில்’, ‘மெர்சல்’ ‘ஜவான்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட பல படங்களின் கலை இயக்குநரான அறியப்பட்டவர் டி. முத்துராஜ். இப்போது ‘பேபி ஜான்’, ‘இந்தியன் 3’, ‘எல்.ஐ.கே’, இளையராஜா பயோபிக் ஆகிய படங்களின் புரொடக்‌ஷன் டிசைனராகவும் இருந்து வருகிறார். விரைவில் இயக்குநராக புரொமோஷன் ஆகிறார் முத்துராஜ். இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

அட்லியுடன்.

”கலை இயக்குநர்கள் இயக்குநர்களாக மாறுவது ஒன்றும் புதிதான விஷயமல்ல. ஹாலிவுட்டில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், நம் சினிமாவில் இயக்குநர்கள் பரதன், அடூர் கோபாலகிருஷ்ணன் இப்படி பல கலை இயக்குநர்களாக இருந்து இயக்குநர் ஆனவர்கள் தான். அந்த வகையில் முத்துராஜூம் இயக்குநர் ஆகிறார். சாபு சிரிலிடம் உதவியாளராக இருந்தவர். இயக்குநர்கள் ஷங்கர், அட்லீ இவர்களின் குட்புக்கில் இருப்பவர். படம் இயக்க வேண்டும் என்பது அவரது பல வருட கனவு என்கிறார்கள்.

ஷங்கருடன்..

அவர் குழந்தைகளுக்கான படமாக இயக்குகிறார். இப்போது அதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அடுத்தாண்டு அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். ‘காக்கா முட்டை’யில் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் கிடைத்தது போல, முத்துராஜின் படத்திலும் சிறந்த நடிகர்கள் நிச்சயம் கிடைப்பார்கள்” என்கிறார்கள்.

வெல்கம் `டைரக்டர்’ முத்துராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.