ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் இயற்கை எய்தியிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். சில குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சுந்தர்.சி-யின் `கலகலப்பு’ திரைப்படத்தில் `பேய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த கோதண்டராமன் அடுத்தடுத்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தில் சந்தானத்தின் குழுவில் ஒரு நபராக வந்து அத்தனை நகைச்சுவை செய்திருப்பார்.

உடல்நலக் குறைவால் பெரம்பூரிலுள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு 10.20 மணியளவில் இயற்கை எய்தியிருக்கிறார். இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது. இவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras
