ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா ஜம்மு-காஷ்மீரின் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தின்போது, ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் 2025-ம் ஆண்டிற்கான பாதுகாப்பு செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.