ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டையில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் 2 ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்றது முதல் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதை ஒடுக்க, பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர் தீவிர ரோந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில், பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் […]