பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம் ஸ்ரீ மந் நாராயணன் மிகப்புனிதமான வராக அவதாரம் எடுத்து பூமியை கவர்ந்து சென்ற ஹிரண்யா சூரன் என்னும் அசுரனைக் கொன்றார். பின் அப்பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்து வந்து ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்து, தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் (அரச மரம்) துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக […]