அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசியதை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது. அமித் ஷா மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பாக நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்தியா கூட்டணி கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அம்பேத்கர் சிலையில் […]