இயக்குநர் பாலா, தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது ‘வணங்கான்’ பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி நேற்று சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ‘பாலா 25’ விழா நடைபெற்றது.
இதில் நடிகர் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஸ்கின், சமுத்திரக்கனி, மணி ரத்னம், சிவகார்த்திகேயன், சீனு ராமசாமி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணி ரத்னம், “எல்லோருக்கும் பாலா மிகசிறந்த இயக்குநர். ஆனால், எனக்கு அவர் ஹீரோ.
அவருடைய `சேது’ படத்தை நான் மிஸ் பண்ணிட்டேன். ‘நந்தா’ திரைப்படத்தைத்தான் தியேட்டர்ல பார்த்தேன். எல்லா கலையிலையும் நேர்த்தி இருந்தது. அவர் அன்னைக்கு எப்படி இருந்தாரோ, அதே மாதிரிதான்… ஹீரோதான் இப்போதும். பாலா கிட்ட ‘ரொம்ப மெதுவாக படம் பண்றீங்க’ன்னுதான் சொல்வேன். நிறைய படங்கள் தமிழ் சினிமாவை கீழ கொண்டு போகுது. நீங்க வந்து படம் பண்ணனும்” என்று பேசியிருக்கிறார்.
விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள் இணைந்து பாலாவிற்கு பாலா 25 ஆண்டு நிறைவு நினைவு ட்ராபியை வழங்கினர்.