Champions Trophy: இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC புதிய அறிவிப்பு; விரைவில் போட்டி அட்டவணை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அங்கு செல்ல மறுப்பதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தும் நெருக்கடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) உருவானது. இதனால், போட்டி அட்டவணையை ICC இன்னமும் வெளியிடவில்லை.

Champions Trophy 2025

மறுபக்கம், இந்தியா தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று கூறிவந்த பாகிஸ்தான், அவர்கள் வரவில்லையென்றால், நாங்களும் இந்தியாவில் ஆட மாட்டோம். இந்தியாவில் நடைபெறும் ICC தொடர்களில் எங்களின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ICC-யிடம் முன்வைத்ததாகத் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், “2024 முதல் 2027 வரையிலான காலகட்டங்களில் இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடைபெறும் ICC தொடர்களில் இந்த இரு அணிகளின் போட்டிகள் மட்டும் தொடரை நடத்தும் அணியின் முன்மொழிவுடன் பொதுவான மைதானத்தில் நடத்த ICC ஒப்புதல் அளிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.” என்று ICC குறிப்பிட்டிருக்கிறது.

ICC Champions Trophy 2025 – இந்தியா, பாகிஸ்தான்

அடுத்தாண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை அடுத்தாண்டு இந்தியாவும், அதற்கடுத்த ஆண்டு அடைவர் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுடன் இலங்கையும் சேர்ந்து நடத்துவதால், ICC-யின் இந்த அறிவிப்பின்படி இவ்விரு தொடர்களும் ஹைபிரிட் மாடலில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.