இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போனில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் மெல்போனுக்கு வந்தடைந்தனர். அந்த சமயத்தில் விராட் கோலி விமான நிலையத்தில் ஒரு பெண் நிரூபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியே வரக்கூடாது என்று விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக பார்த்து வருகின்றனர். எனவே விமான நிலையில் தனது குழந்தைகளை நோக்கி கேமரா இருந்ததால் என்பதால் விராட் கோபமடைந்துள்ளார். “விமான நிலையத்தில் விராட் கோலி தன் குடும்பத்தை நோக்கி கேமரா இருந்ததும், தனது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியே வந்து விடுமோ என்று கோபம் அடைந்தார், பின்பு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது” என்று நிருபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எனது குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கொஞ்சம் தனியுரிமை தேவை. எனவே எனது அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாது” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். பின்னர் உங்கள் குடும்பத்தை புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க வில்லை என்று நிருபரும், கேமரா மேனும் கூறவே பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் விராட் கோலி.
Indian cricket superstar Virat Kohli has been involved in a fiery confrontation at Melbourne Airport. @theodrop has the details. https://t.co/5zYfOfGqUb #AUSvIND #7NEWS pic.twitter.com/uXqGzmMAJi
— 7NEWS Melbourne (@7NewsMelbourne) December 19, 2024
பார்டர் கவாஸ்கர் தொடர்!
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் விராட் கோலி ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் சதம் அடித்தாலும், அதனை தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒரு சதம் தவிர 5, 7, 11 மற்றும் 11 மட்டுமே அடித்துள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 7 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் இந்த முறை ரன்கள் அடிக்கவே சிரமப்பட்டு வருகிறார். இது ரசிகர்கள் மனதில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் 2 டெஸ்ட் உள்ளது
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் பாக்சிங் டே டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆன நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.