திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐ-போன் இனி முருகனுக்கே சொந்தம் என்று பாளையத்து அம்மன் பட பாணியில் அந்த கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையை அடுத்த திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு கடந்த மாதம் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் காணிக்கை செலுத்த சென்றுள்ளார். அப்போது அவர் காணிக்கையுடன் தான் கையில் வைத்திருந்த ஐ-போனை கோயில் உண்டியலில் தவறவிட்டுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்த அவர் தனது மொபைல் போனை எடுத்துத் தரும்படி […]