சென்னை: கனமழையால் விடுமுறை விடபட்ட அன்று (கடந்த 12-ந்தேதி ) நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வை நாளை (21ந்தேதி) நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, ஏற்கனவே பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வை ஒத்தி வைத்துள்ளது. இதற்கிடையில், கடந்த வாரம் பெய்த மழை காரணமாக, கடந்த 12-ந்தேதி சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் அன்று நடைபெற வேண்டிய தேர்வுகளை […]