கே9 பீரங்கி துப்பாக்கிகளுக்கு எல்&டி நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

புது டெல்லி,

7,628.70 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க (இந்தியன்) பிரிவின் கீழ் இந்திய ராணுவத்திற்காக 155 மிமீ/52 கலிபர் K9 VAJRA-T Self-Propelled Tracked Artillery Guns கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத் துறை லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. புது டெல்லியின் சவுத் பிளாக்கில் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்தின் பிரதிநிதிகளால் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 100 கே9 வஜ்ரா துப்பாக்கிகள் இந்திய ரானுவத்தால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக லடாக் போன்ற உயரமான பகுதிகளில் இந்த துப்பாக்கிகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து தற்போது அடுத்தக்கட்ட ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே பல துறையில் சிறந்து விளங்கும் லார்சன் & டூப்ரோ பாதுகாப்புத் துறை ஆயுதங்களைத் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் பீரங்கி அமைப்பான கே9 வஜ்ரா ஆயுதத்தை இந்நிறுவனம் மிகவும் சிறப்பான முறையில் ஹசிசா தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது. கே9 வஜ்ரா ஆயுத நீண்ட தூரம், துல்லியமான மற்றும் தாக்கும் கருவியாகும். மைனஸ் டிகிரி உள்ளிட்ட கடுமையான வானிலைகளில் திறம்பட செயல்படும் திறன் கொண்டது. இதன் மூலம் சமீப காலத்தில் இது இந்திய ராணுவத்திற்கு மதிப்புமிக்க சொத்தாக மாறியுள்ளது.

மத்திய பாதுகாப்பு துறை, லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடனான 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் திட்டம் மூலம் நான்கு ஆண்டுகளில் ஒன்பது லட்சம் பணிநேரம் வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.

இந்தநிலையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறையிடமிருந்து ரூ.13,500 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பாதுகாப்புத் துறை பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்போது நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டில் தயாரிப்பில் முன்னேறி வருவதால், பாதுகாப்புத் துறை பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கும் களமாக மாறி வருகிறது. இந்திய அரசு, பாதுகாப்புத் துறையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் விளைவாக, பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்து வருவ்து குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.