சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 28.71 கோடியாக உயர்ந்து இருக்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவதற்கான திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. பல சாதனைகளையும் படைத்து வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு 43 ஆயிரத்து 283-க்கும் மேற்பட்ட பழமையான கோவில்களையும், […]