புதுக்கோட்டை: துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசு, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக, துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆளுநர், இந்த குழுவானது யுஜிசி மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அறிவிக்கப்படவில்லை என கூறி வருகிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு […]