சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ரூ.22,000 கோடியில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மத்தியஅரசு எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான விளக்கங்களை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் மத்தியஅரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரூ. 22,000 கோடியில் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதிக்காக மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]